I Phone ...

 

ஐபோன் அறிமுகமாகி 15 மாதங்கள் கழித்து, இதற்குப் போட்டியாக, முதல் ஆண்ட்ராய்ட் போன் அறிமுகமானது. எச்.டி.சி. ட்ரீம் என இது அழைக்கப்பட்டது.

செப்டம்பர் 18, 2013ல், ஐ.ஓ.எஸ்.7 சிஸ்டம் வெளியாகி, பல புதிய மாற்றங்களையும் வசதிகளையும் தந்தது. இதனைத் தொடர்ந்து ஐபோன் 5 எஸ், ஐபோன் 5சி வெளியாகின. விற்பனைக்கு வந்த 3 நாட்களில், 90 லட்சம் போன்கள் விற்பனை செய்யப்பட்டதாக ஆப்பிள் அறிவித்தது.


ஸ்மார்ட் போன் பயன்பாட்டில், ஆண்ட்ராய்ட் சாதனங்களே மிக அதிகமாக இயங்கி வருகின்றன. உலக அளவில் 84.7% ஆக உள்ளது. ஐ.ஓ.எஸ். 11.7% மற்றும் விண்டோஸ் போன் 2.5% ஆக உள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால், ஸ்மார்ட் போன் விற்பனையில் அதிக லாபம் ஈட்டுவது ஆப்பிள் போன்களே.

இன்றைய சூழ்நிலையைச் சந்தித்து, விற்பனையில் முதல் இடம் பிடிக்க ஆப்பிள் நிறுவனம் தன் விற்பனைக் கொள்கையில் அதிக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதுள்ளது. அதிக மொபைல் போன் பயன்பாடு மேற்கொள்ளப்படும் ஆசிய பசிபிக் நாடுகளில், விலை குறைந்த ஆண்ட்ராய்ட மாடல்கள் பெருகி வருகின்றன. இவற்றுடன், என்றும் அதிக விலையில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள், போட்டியில் பங்கேற்க இயலவில்லை. புதிய ஐ.ஓ.எஸ்.8 சிஸ்டம், வீடுகளில் ஆப்பிள் சாதனங்கள் பயன்பாட்டை முன்னிறுத்தி பல வசதிகளைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது ஆப்பிள், ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கு ஒரு சவாலாய் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.