தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் பொருளாதாரத்துக்கு ஆற்றும் பங்களிப்புகள்

வங்கித்துறை (Banking)

வங்கித்துறையில் தொழில்நுட்பமானது தன்னியக்க வங்கி கணக்கு கணித்தல் முறை, தன்னியக்க அட்டை (ATM Card) பயன்பாடு என்பவற்றை குறிப்பிடலாம்.

கல்வித்துறை (Education)

தகவல் தொழில்நுட்பமானது பின்வரும் வழிகளில் கல்வித்துறைக்கு உதவுகின்றது

  • கணினி வழிகாட்டலில் கற்றல் (computer assisted learning)
  • கணினி வழிகாட்டலிலான பாடசாலை நிர்வாகம் (computer assisted school administration)

உதாரணம்:

  • கணனி வழிகாட்டலில் கற்றல் என்பது வினாக்கள்
  • தொகுத்தல்,செயற்பாடு  மற்றும் பயிற்ச்சி அளித்தல், விளையாட்டு,
  • பிரச்சினைக்கு தீர்வு காணல் என்பவற்றுக்கு உதவுகின்றது

போக்குவரத்து(Transport)

போக்குவரத்துத் துறையில் தகவல் தொழில்நுட்பமானது பின்வரும் வழிகளில் உதவுகிறது

  • புகையிரத மற்றும் விமானபோக்குவரத்து ஆசனங்களை பதிவு செய்தல்.
  • வாகனப் போக்குவரத்து கட்டுப்படுத்தல்.
  • ஊழியர்களின் கடமை நேர அட்டவணைதயாரித்தல்.
  • வான்வெளி பயணங்களின் போது கணினியானது பல்வேறு வழிகளில் உதவுகிறது.

பொறியியல் (Engineering)

பொறியியலாளர்கள் தகவல் தொழிநுட்பத்தை பயன்படுத்தி இயந்திரங்கள், கருவிகள், கட்டிடங்கள் போன்றவற்றிற்கான வரைப்படங்களை தயாரிக்கின்றனர்.

Example: Computer Aided Drawing (CAD)

மருத்துவத்துறை (Medicine)

வைத்தியசாலையில் தகவல் தொழில் நுட்பமானது பின்வரும் வழிகளில் உதவுகிறது

  • வைத்தியத்துறையில் புதிய கருவிகளின் வருகை.
  • நோயாளர்களின் பதிவுகளை மேற்கொள்ளவும்,மேன்படுத்தல்.

பாதுகாப்பு (Defence)

தகவல் தொழில்நுட்பமானது குற்றவாளிகளை கண்டுபிடிப்பதை இலகுவாக்குகின்றது. (மேலைத்தேச நாடுகளில் இதன் பயன்பாடு அதிகமாகவுள்ளது

உதாரணம்: மோட்டார் வேகத்தை நெறிப்படுத்த உதவுகிறது

 

பொழுதுபோக்கு (Entertainment)

தகவல் தொழில்நுட்பமானது இன்று எல்லோராலும் ஒரு பொழுது போக்குச்சாதனமாக பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

உதாரணம்:

  •  கணனி மூலமான விளையாட்டுக்கள்
  •  கணனி மூலமான படம் பார்த்தல்
  • கணனி மூலமான பாட்டுக்கேட்டல்

தொடர்பாடல் (Communication)

தகவல் தொழில்நுட்பமானது தொடர்பாடல் துறையிலே புதிய தொடர்பாடல் தொழில்நுட்பங்களை அறிமுகப் படுத்தியுள்ளது.இதனால் குறைந்த செலவுடனும் விரைவாகவும் தகவல்களை பரிமாறக்கூடியதாக உள்ளது.

 

தரவு தகவல் செய்முறை

தரவு, தகவல், செய்முறைக்கிடையிலான வித்தியாசங்களை வேறுபாடுத்திகாட்டல். (Distinguish the difference between data information and data processing)

 

தரவு தகவல் செய்முறை

 

தரவு

தெளிவான அர்த்தமற்ற மற்றும் ஒழுங்கற்ற விடயங்களே தரவுகளாகும்.

தரவுகள் அமைந்துள்ள முறைகள்.

  1. எழுத்து வடிவில் (எழுத்துக்கள் – அ,ஆ, இலக்கங்கள் -1,2, குறியீடுகள் – +,*,/)
  2. கட்புல வடிவில்
  3. செவிபுல வடிவில்

 தரவுகளை வகைப்படுத்தல்.

  1. பண்பு – எண்ணிக்கை அளவில் முன்வைக்க முடியதவை (நிறம், வடிவம்,சத்தம்)
  2. அளவு – எண்ணிக்கை அளவில் முன்வைக்க கூடியவை.

 

தரவின் இயல்புகள்.

  1. சேகரித்து சேமித்து வைக்க முடியும்
  2. சேமிப்பு ஊடகமொன்றிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
  3. கலந்துறையாட முடியும்
  4. செய்முறைக்கு உட்படுத்தமுடியும்

 

தகவல்

கருத்துள்ளவாறு ஒழுங்கு செய்து அமைக்கப்பட்ட தரவுகள் தகவலாகும்.

 

தகவலின் தரத்தை மேம்படுத்த உதவும் காரணிகள்.

  1. பொருத்தம்/ தொடர்பு (relevance)
  2. தெளிவு (clarity)
  3. திருத்தம் (accuracy)
  4. பூர்த்தி    (completeness)
  5. தொடர்பு கொள்ளகூடிய தன்மை  (make of communication)
  6. நேர வரையறை (Time Horizon)

 

தகவலின் பண்புகள். (Properties of Information)

  1. திருத்தம் (Accuracy)
  2. மாதிரி    (Format)
  3. அதிர்வெண் (Frequency)
  4. அகலம்  (Breadth)
  5. உற்பத்தி  (Origin)
  6. நேர வரையறை  (Time Horizon)

 

திருத்தம் (Accuracy)

தகவல் சரி அல்லது தவறு/திருத்தம் அல்லது திருத்தமின்மை

மாதிரி    (Format)          

இது பண்புரீதியாக, அளவுகள், எண் முறைகள் மற்றும் வரைபட வடிவிலும் சுருக்கமகவும் விரிவாகவும் விபரிக்கப்படும்.

அதிர்வெண் (Frequency)

இது எவ்வளவு காலத்தில் தகவல் தேவைப்படுகின்றது, சேகரிக்கப்படுகின்றது அல்லது தயாரிக்கப்படுகின்றது என்பதன் அளவாகும்.

அகலம்  (Breadth) 

இது தகவலின் நோக்கத்தை வரையறுக்கும்.

உற்பத்தி  (Origin)

தகவல் நிறுவனத்திற்கு உள்ளக அல்லது வெளியக வளங்களிலிருந்து பெறப்படலாம்.

நேர வரையறை (Time Horizon)

தகவல் கடந்த கால,தற்போதைய நிகழ்வு அல்லது எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை நோக்கியிருக்கும்.