சார்ல்ஸ் பாபேஜ்

சார்ல்ஸ் பாபேஜ் 1837

கணினியின் தந்தை என கருதப்படும் சார்ல்ஸ் பாபேஜ் (Charles Babbage, 1791 - 1871)பிரித்தானிய கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர். இன்றைய கணினிகள் பயன்படுத்தும் எந்திர கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்.

1837யில் முதல் முழுமையான செய்நிரல் கணினியை (Programmable Mechanical Computer)சார்ல்ஸ் பாபேஜ் வடிவமைத்தார். ஆனால் அக்கால தொழில்நுட்ப எல்லை, நிதி பற்றாக்குறை, மற்றும் தன்னுடைய வடிவமைப்புடன் தனகுதலை நிறுத்தமுடியாமை (ஆயிரக்கணக்கான கணினி சம்பந்தப்பட்ட பொறியியல் செயற்திட்டங்களின் முடிபுக்கு காரணமாக பண்பு) போன்ற காரணங்களின் கலப்பால் இந்த சாதனத்தை அவரால் முழுமையாக உருவாக்க முடியவில்லை.

இவரது இயந்திரத்தில் துளையிடப்பட்ட அட்டைகள் (Punch Card) பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக இரண்டையும் மூன்றையும் கூட்ட வேண்டும் எனில் இரண்டு துளையிடப்பட்ட அட்டையையும், மூன்று துளையிடப்பட்ட அட்டையையும் இவியந்திரதினுள் நுழைத்தால் ஐந்து துளையிடப்பட்ட அட்டையை விடையாகப் பெற்றனர்.