ஊடகங்களின் நன்மைகள் மற்றும் தீமைகள்

ஊடக வளர்ச்சி: ஊடகத்துறை வேகம் பெற்று அறிவியலின் வளர்ச்சியால் இன்று பல்வேறு பரிமாணம் பெற்று உள்ளது. அச்சு ஊடகம், காட்சி ஊடகம் ஆகியன மனித வாழ்வில் இரண்டற கலந்து விட்டன. 
 
செய்தி தாள், நாளேடு, வார இதழ், மாத இதழ், மாதமிருமுறை இதழ் எனவும், தொலைதொடர்பு ஊடகங்கள் வானொலி, தொலைக்காட்சி, பண்பலை, வலைத்தளம், இணையம் எனவும் கிளை விட்டு வளர்ந்து உள்ளது. 
 
இவ்வூடகங்கள் அன்றாட மனித வாழ்வில் தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும் முதன்மை சாதனங்கள் ஆகி விட்டன. தனி மனித வாழ்வை தவிரவும் சமூக பொருளாதார, அரசியல் மற்றும் பண்பாட்டு தளங்களிலும் ஊடகம் முக்கிய காரணியாக திகழ்கிறது.
 
நன்மைகள்: இன்றைய ஊடக வளர்ச்சியின் மிக முக்கிய நன்மை யாதெனில் -
 
  • "விரும்பிய தகவலை" கால விரயம் இன்றி உடனே பெற முடிதல்
  • Discovery அலைவரிசையில் தமிழ் ஒளிபரப்பானது உயிரினங்களை பற்றியும், தொழில் நுட்ப வளர்சிகளையும் சாமானியருக்கும் புரியும் வண்ணம் படைகின்றன . மேலும் தஞ்சை பெரிய கோவில் பற்றிய செய்தி தொகுப்பு போன்றவை நமது பெருமிதங்களை தக்கவாறு உணர வழி செய்கின்றது .
  • நிலவியல் அமைப்பினை எளிதில் அறிய "கூகுள் எர்த் " பெரிதும் பயன்படுகிறது.
  • உலகின் பல்வேறு திசைகளின் நிகழ்வுகளை சமகாலத்தில் தாமதமின்றி துல்லியமாக அறிய ஊடக வளர்ச்சி பெரிதும் பயன் தரவல்லது. 
 
 
குறைகள்/ தீமைகள்: ஊடகத்தின் அபரிதமான வளர்ச்சியில் நிறைகள் பல இருபினும் சில குறைகளும் உள்ளன. அவைகளை கீழே பட்டியலில் பார்ப்போம்.
  • ஊடகங்களில் "நடுநிலைமை" என்பது அறவே அற்று போய்விட்டது.
  • சார்புத்தன்மை செய்திகள் உருவாக்கபடுகின்றன.
  • இணையத்தில் "சாட்டிங்" ல்  60 % பாலியல் தொடர்பான விவாதங்களே நடை பெறுகின்றன.
  • இணைய குற்றங்கள் - "சைபர் க்ரைம்" நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • காட்சி ஊடகங்கள் குழந்தைகளை நுகவோர்களாக மாற்றிவிட்டன.
  • மாரடைப்பு, ரத்த கொதிப்பு போன்ற "ஆண்களின் நோயாக" அடையாளம் காண பட்டவை ஊடக தாக்குதலால் பெண்களுக்கும் உரிய நோய்க் காரணியாகி விட்டது.
  • விளம்பரம் மற்றும் வியாபார நோக்கமானது அறம், நேர்மை, துணிவு, போன்ற தனிமனித உயர்குணங்களை ஊடக துடைத்து எறிந்து வருகிறது.
  • "Paid News "  எனப்படும் விளம்பரத்தையே செய்தியாக போடும் செயல் ஒரு புதிய சீரழிவாக ஊடகத்துறையை ஆட்கொள்ள துவங்கி இருக்கிறது.a