இலக்குகளை ஏன் நிர்ணயிப்பதில்லை ?

இலக்குகளை நாம் நிர்ணயித்துக் கொள்ளாமைக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் பின்வருவனவும் அடங்கும். 
  • நம்பிக்கையற்ற மனப்பாங்கு
  • தோல்வி பற்றிய பயம்
  • பேராவல் இன்மை
  • புறக்கணிக்கப்படுவோம் என்ற பயம்
  • தள்ளிப் போடுதல்
  • தாழ்ந்த சுயமதிப்பு
  • இலக்குகளின் முக்கியத்துவம் அறியாமை
  • இலக்கு அமைத்தல் பற்றிய அறிவின்மை
பொதுவாக இலக்குகள் SMART ஆக இருக்க வேண்டும்.
 
  • S - Specific - திட்டவட்டமானது
  • M - Measurable - அளவிடக்கூடியது
  • A - Achievable - சாதிக்கக் கூடியது
  • R - Realistic - யதார்த்மானது
  • T - Time bound - கால எல்லைக்குட்பட்டது.

இலக்குகள் கீழ்வருமாறு இருக்கலாம்.

  • குறுகியக் கால இலக்குகள் - ஓர் ஆண்டு வரைக்கும்
  • இடைக் கால இலக்குகள் - மூன்று ஆண்டுகள் வரைக்கும்
  • நீண்டகால இலக்குகள் - ஐந்து ஆண்டுகள் வரைக்கும்
  • இலக்குகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலானதாகவும் இருக்கலாம்.
ஆனால், அப்போது அவை வாழ்வின் குறிக்கோளாகிவிடும். நமக்கு குறிக்கோள் இல்லாவிட்டால், நமது இலக்குகளை ஒவ்வொன்றாக அடைந்தாலே போதும் என்ந ஒரு வித கிட்டப்பார்வையுடன் வாழத் தொடங்கிவிடுவோம். இலக்குகளைச் சிறுசிறு பகுதிகளாப் பிரித்துக் கொண்டால், அவற்றை எளிதில் அடைந்து விடலாம்