சோதனைகள் இடியாய் தாக்கும்போது...

சோதனைகள் யாருக்கு வரும், எப்படி வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. ‘எங்களுக்கு எந்த குறையும் இல்லை’ என்று சொல்பவர்களைக்கூட கஷ்டங்கள் இடியாய் தாக்குகின்றன.

வேகமாக ஓடுகிறவன் எப்போதும் பந்தயத்தில் வெற்றி பெறுவதில்லை, வலிமையுள்ளவன் எப்போதும் போரில் வெற்றி பெறுவதில்லை, ஞானமுள்ளவனுக்கு எப்போதும் உணவு கிடைப்பதில்லை, புத்திசாலி எப்போதும் பணக்காரன் ஆவதில்லை, திறமையுள்ளவன் எப்போதும் வெற்றி பெறுவதில்லை. ஏனென்றால், எதிர்பாராத நேரத்தில் அசம்பாவிதங்கள் எல்லோருக்கும் நேரிடுகிறது