காதல் எப்படிக் கருணையாகும்?

 

சிவாஜி கணேசனும் சௌகார் ஜானகியும் தொட்டிலில் கிடக்கும் இரட்டைக் குழந்தைகளைத் தாலாட்டிப் பாடும் காட்சி. சிகரெட்டைப் பிடித்தபடி குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும் கணேசன், நல்லவேளை குழந்தையைத் தூக்கிக் கொஞ்சு வதற்கு முன்பே சிகரெட்டை விட்டெறிந்திருப்பார். “நான் காதலெனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே” என்று தந்தை பாட, அதற்குத் தாயின் பதில் இப்படி அமையும்... “அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே” காதலெனும் கவிதை சரிதான். ஆனால், அது என்ன கருணைக்குப் பரிசு? ஆண்களின் காதல் என்பது பெண்கள் மீது காட்டும் கருணையா என்ன?

kadhal க்கான பட முடிவு

இருளும் ஒளியும் கலக்கும்போது உயிர் உருவாகிறது. சிவம் ஒளி, சக்தி இருள் என்று கொள்வது தமிழ்ச் சித்தர்கள் மரபு. மனம் என்பது சக்தியின் கொடை. அது உற்பத்தியான இடம் தாயின் கருவறை. ஆனால், கருணை என்பது சிவத்தின் கொடை. அது உற்பத்தியான இடம் தந்தையின் விந்து. விந்து என்றாலே ஒளி. ஒளியால் கருணை உண்டானது என உரை விளக்கம் நீளும்.

எப்போதும் நாயகர்கள் அசடர்கள்தான். அவர்களின் மொழி நேரடித்தன்மையைத் தாண்டிச் செல்வதில்லை. ஆனால், நாயகியர் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் தத்துவமொன்று உள்ளுறைந்து நிற்கிறது. அவள் தாய். சக்தி. அவள் கருணைக்கு அதாவது சிவத்துக்கு அளித்த பரிசல்லவா குழந்தை?

https://www.colourmedia.lk/